Jump to content

TA/770514 - ஶ்ரீல பிரபுபாதர் Hrishikesh இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யார் ஒருவர் கிருஷ்ணரை—'வாசுதேவனே அனைத்தும்' என்று புரிந்து கொண்டுள்ளாரோ—அவரே மகாத்மா. ஸ மகாத்மா (அவரே மகாத்மா). எனவே அதுவே பரிந்துரைக்கப்படுகிறது. மஹாத்-ஸேவாம் த்வாரம் ஆஹுர் விமுக்தேஹ் (ஶ்ரீ.பா 5.5.2(1977)). அப்படிப்பட்ட ஒரு மகாத்மாவின் சேவையைப் பெறும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், அவருக்குச் சேவை செய்ய முயற்சி செய்யுங்கள். அவருடைய சேவகனாக மாறுங்கள். அப்போது உங்களுடைய முக்திப் பாதை திறக்கப்படும்.மற்றும் தமோ-த்வாரம் யோஷிதாம் ஸங்கி-ஸங்கம்: புலனின்பத்தின் பின்னால் அலைபவர்களுடன் நீங்கள் பழகினால், நீங்கள் இருளை நோக்கிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். இரண்டு வழிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன: ஆஹுர் விமுக்தேஹ் (முக்தியின் வாசல்) மற்றும் த்வாரம், தமோ-த்வாரம் (இருளின் வாசல்). இப்போது உங்களுடைய தேர்வைச் செய்யுங்கள், 'நாம் எந்த வழியில் செல்ல வேண்டும்: இந்த வழியிலா அல்லது அந்த வழியிலா?'"
770514 - உரையாடல் - Hrishikesh