TA/770417b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இந்த தவறான பாதையில் வழிநடத்தும் நாகரிகத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றவே நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இதுதான் கிருஷ்ண உணர்வு இயக்கம். நாம் நம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டு (முழுமையடையச் செய்து), மற்றவர்களுக்கும் ஒரு முழுமையான வாழ்க்கையைக் கற்பிக்க முயற்சி செய்கிறோம். கிருஷ்ணர் தனது உபதேசத்தை, 'நீங்கள் இந்த உடல் அல்ல' என்ற இந்த புரிதலில் இருந்தே தொடங்குகிறார். இதுதான் பகவத் கீதையின் ஆரம்பம். மேலும், உடலை மட்டுமே ஆன்மா என்று நினைக்கும் இந்த உடல் சார்ந்த வாழ்க்கை கருத்தில், ஆன்மீக அறிவு எங்கே இருக்கிறது? அவர்கள் ஆன்மீகத்தைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் ஆன்மீக வாழ்க்கை என்பது... முதலாவதாக ஒருவன் 'நான் இந்த உடல் அல்ல' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அஹம் பிரம்மாஸ்மி. அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா. 'அப்படியென்றால் நான் பிரம்மன் என்றால், எனது மதிப்பு என்ன? இதுவரை நான் உடல் சார்ந்த வாழ்க்கை கருத்தை வழிநடத்தினேன், ஆனால் நான் பிரம்மன்.' பின்னர் பிரம்ம ஜிக்ஞாஸா. அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா." |
| 770417 - உரையாடல் B - மும்பாய் |