Jump to content

TA/770405c - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முழு மனித சமுதாயத்திற்கும் உண்மையான கலாச்சாரத்தைப் பற்றி ஏதேனும் ஒன்றை வழங்குவதற்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அது இந்தியாவின் தனிச்சிறப்புரிமை ஆகும். இந்தியாவால் அதை வழங்க முடியும். உலகம் முழுவதுமே அறியாமை என்ற இருளில் மூழ்கிக்கிடக்கிறது. எனவே, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா அந்த உண்மையான அறிவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த உண்மையான அறிவைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் பௌதிக நாகரிகத்தின் போலிப் பளபளப்பிற்கு பலியாகிவிட்டார்கள். எனவே, இந்தியாவின் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட இத்தகையதொரு மகத்தான கொடை, இந்த உலகிற்குப் பங்களிக்கப்படாமல் (சேர வேண்டியவர்களைச் சென்றடையாமல்) போய்விடக் கூடாது என்று நான் விரும்பினேன்; அதற்காக நான் முயற்சி செய்கிறேன். இதுதான் எனது நோக்கம். இந்த கலாச்சாரம் பகவத் கீதை மற்றும் கிருஷ்ணரை அடிப்படையாகக் கொண்டது. ஆகவேதான், இதற்கு கிருஷ்ண பக்தி (கிருஷ்ண உணர்வு) என்று பெயரிடப்பட்டுள்ளது."
770405 - Interview - மும்பாய்