Jump to content

TA/770329b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கடவுள் ஒருவர் மட்டுமே என்றால், அந்த கடவுளை அறிந்துகொள்வதும் அல்லது கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுமே மதமாகும். பாகவதத்தின் வரையறைப்படி: தர்மம் து சாக்ஷாத் பகவத்-பிரணீதம் (ஶ்ரீ.பா 6.3.19(1977)). தர்மம் என்றால் கடவுளால் வழங்கப்பட்ட கட்டளைகள் அல்லது சட்டம் என்று பொருள். சட்டம் என்பது அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவைப் போன்றது. யாரும் சட்டத்தை வீட்டில் தயாரித்துவிட முடியாது. அரசாங்கம் "இடதுபுறமாகச் செல்லுங்கள்" என்று உத்தரவிட்டால், அதுவே சட்டம். நீங்கள் "வலதுபுறமாகச் செல்லுங்கள்" என்று சட்டத்தை உருவாக்க முடியாது. அது சட்டமாகாது. எனவே, மதம் என்பது கடவுளின் கட்டளையாகும். ஆகவே, கடவுள் யார் மற்றும் அவருடைய கட்டளை என்ன என்பதை நாம் அறிய வேண்டும்—அப்போதுதான் நீங்கள் மதவாதியாக (நெறிதவறாதவராக) இருக்க முடியும். இல்லையெனில், அங்கு மதமே இல்லை."
770329 - உரையாடல் - மும்பாய்