TA/770325 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கடவுள் ஒருபோதும் உடலுறவுக்கு எதிரானவர் அல்ல. யார் சொன்னது? கடவுளே சொல்லியிருக்கிறார், தர்மவிருத்தஹ் காமோ 'ஸ்மி: "மத வாழ்வின் ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக இல்லாத உடலுறவு எதுவோ, அது நானே." "உடலுறவை நிறுத்துங்கள்" என்று கடவுள் ஒருபோதும் கூறுவதில்லை. அப்படி இல்லையென்றால், ஏன் இங்கே கிருஹஸ்த ஆசிரமம் (இல்லற வாழ்க்கை) இருக்கிறது? ஆசிரமம் என்றால் அங்கே கிருஷ்ண உணர்வு இருக்கிறது என்று பொருள். "இது ஒரு ஆசிரமம்" என்று நாம் சொன்னவுடனேயே, அங்கே கிருஷ்ணரைப் பற்றிய உணர்வு இருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம். எனவே பிரம்மச்சாரி ஆசிரமம், கிருஹஸ்த ஆசிரமம், வானபிரஸ்த ஆசிரமம், சந்நியாச ஆசிரமம் (என நான்கு ஆசிரமங்கள் உள்ளன). அதனை ஆசிரமமாக மாற்றி, அந்த ஆசிரமத்தின் சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுங்கள். அப்போது எல்லாம் சரியாக இருக்கும். இல்லையெனில், நீங்கள் இயற்கையின் விதிகளால் பந்தப்படுவீர்கள்." |
| 770325 - சொற்பொழிவு SB 05.05.01-2 - மும்பாய் |