TA/770228b - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "மனதின் இயல்பை எல்லாரும் அறிவர்—சில நேரங்களில் ஒன்றை ஏற்றுக்கொள்வது, மறுபடியும் அதை நிராகரிப்பது. சங்கல்ப-விகல்ப. இதுதான் மனதின் தரம் அல்லது மனதின் இயல்பு. சில சமயங்களில் மனம் சத்துவ குணத்தின் மேல் தாவுகிறது, சில சமயங்களில் ரஜோ குணத்தின் மேல், சில சமயங்களில் தமோ குணத்தின் மேல் தாவுகிறது. இந்த விதமாக நாம் வெவ்வேறு வகையான மனநிலைகளைப் பெறுகிறோம். இந்த விதமாகவே, மரணத்தின் போது, இந்த உடலை விட்டுப் பிரியும் அந்த நொடியில் எந்த மனநிலை இருக்கிறதோ, அது நம்மை சத்துவ குணம், ரஜோ குணம் அல்லது தமோ குணத்தைக் கொண்ட மற்றொரு உடலுக்குக் கொண்டு செல்லும். இதுதான் ஆன்மா உடல் மாறிச் செல்லும் (மறுபிறவி எடுக்கும்) வழிமுறையாகும். எனவே, நாம் மற்றொரு உடலைப் பெறும் வரை இந்த மனதைப் பயிற்றுவிக்க வேண்டும். அதுவே வாழும் கலை. ஆகவே, உங்கள் மனதை எப்போதும் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்படி நீங்கள் பயிற்றுவித்தால், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். இல்லையெனில், விபத்துகள் (வீழ்ச்சி) ஏற்பட வாய்ப்புள்ளது." |
| 770228 - சொற்பொழிவு SB 07.09.08 - மாயாப்பூர் |