Jump to content

TA/770227 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பக்தியில் 'உத்ஸாஹா' (மன ஊக்கம்/ஆர்வமே) முதல் அங்கமாகும், முதலில் உத்ஸாஹா வர வேண்டும். இந்தச் சிறுவனைப் போல. அவன் இதற்கு முன் இங்கே வந்ததில்லை, அதனால் அவனிடம் மிகுந்த உத்ஸாஹம், ஆர்வம் இருக்கிறது. எனவே அவன் ஊக்குவிக்கப்பட வேண்டும். பக்தித் தொண்டின் ஒட்டுமொத்த அடிப்படையே இந்த உத்ஸாஹம் தான். உதாரணமாக, இந்த உத்ஸாஹம் மட்டும் இல்லாதிருந்தால், எழுபது வயது நிறைந்த ஒரு முதியவர், எந்த ஒரு (பௌதிக) ஆதரவும் இன்றி, பிருந்தாவனத்திலிருந்து நியூயார்க் போன்ற இவ்வளவு தூரத்திலுள்ள ஒரு இடத்திற்கு எவ்வாறு சென்றிருக்க முடியும்? அதற்கிருந்த ஒரே அடித்தளம் உத்ஸாஹம் தான். எனவே உத்ஸாஹம் என்பது அவ்வளவு முக்கியமான ஒன்று. அதாவது, ஆன்மீக வாழ்க்கையில் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். உத்ஸாஹான் நிஸ்சயாத் தைர்யாத் தத்-தத்-கர்ம-ப்ரவர்தனாத் (உபதேசாம்ருதம் 3)."
770227 - உரையாடல் B - மாயாப்பூர்