Jump to content

TA/770225d - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் கிருஷ்ணரின் புனித நாமத்தை உச்சரிக்கும்போது, இது வெறும் சப்த அதிர்வு (ஒலி) என்றும், கிருஷ்ணர் வேறு என்றும் நினைக்காதீர்கள். இல்லை. அபின்னத்வாத் (இரண்டும் வேறுபட்டவை அல்ல). நாம-சிந்தாமணி-கிருஷ்ணஹ். கிருஷ்ணர் எவ்வாறு சிந்தாமணியாக (விரும்பியதை அளிக்கும் தெய்வீக ரத்தினமாக) இருக்கிறாரோ, அதேபோல அவருடைய புனித நாமமும் சிந்தாமணியாகும். நாம சிந்தாமணிஹ் கிருஷ்ணஷ் சைதன்ய-ரச-விக்ரஹஹ். சைதன்ய என்றால் முழுமையான உணர்வு, நாம-சிந்தாமணி-கிருஷ்ணஹ். நாம் புனித நாமத்துடன் தொடர்பு கொள்ளும்போது, கிருஷ்ணர் உங்களது சேவையை முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இவ்வாறு அழைக்கிறீர்கள்: 'ஹே கிருஷ்ணா! ஹே ராதாராணி! தயவுசெய்து என்னை உங்களது சேவையில் ஈடுபடுத்துங்கள்.' ஹரே கிருஷ்ண மந்திரத்தின் பொருள், ஹரே கிருஷ்ணா, 'ஹே கிருஷ்ணா, ஹே ராதாராணி, ஹே இறைவனின் சக்தியே, தயவுசெய்து என்னை உங்களது சேவையில் ஈடுபடுத்துங்கள்' என்பதாகும்."
770225 - சொற்பொழிவு SB 07.09.05 - மாயாப்பூர்