TA/770219b - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "கிரஹஸ்த (இல்லற) சீடர்கள் விக்ரகத்தை வழிபட வேண்டியவர்கள். மற்றவர்கள், பிரசாரம் செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்கள். இதுவே முதன்மையான தத்துவம். எனவே நீங்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தால் . . . விக்ரக வழிபாடு என்பது குறிப்பிட்ட அட்டவணைப்படி செய்யப்பட வேண்டும்: இந்த நேரம், இந்த நேரம், இந்த நேரம் என்று. அப்படியென்றால் அது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். சைதன்ய மஹாபிரபு அதைச் செய்யவில்லை. அவர் தனியாகப் பயணம் செய்து, பிரசாரம், பிரசாரம் மட்டுமே செய்து கொண்டிருந்தார். எனவே விக்ரகத்தைச் சுமந்து செல்வது பெரிய சுமையாக இருக்கும். ஆனால் பிரசார வேலையில், நீங்கள் பலராக இருக்கும்போது, பேருந்தில் விக்ரகத்தைக் கொண்டு செல்கிறீர்கள். அது நல்லது; அங்கே மற்றவர்கள் இருக்கிறார்கள், ஏதேனும் நல்ல ஈடுபாடுகள் . . . அது கோவில் வாழ்க்கை. ஆனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் விக்ரகத்தைக் கொண்டு சென்றால், அது தொந்தரவாக இருக்கும். அது உங்கள் பிரசார வேலைக்குத் தடையாகவும் இருக்கும்." |
| 770219 - உரையாடல் C - மாயாப்பூர் |