TA/770217 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இந்த இயக்கம் மூளைச்சலவை செய்வதல்ல; நாங்கள் மூளையைக் கொடுப்பவர்கள். உங்கள் மூளை எங்கே இருக்கிறது? முதலில் உங்களுக்கு மூளை இருக்க வேண்டும்; அதன் பிறகுதான் அதைச் சலவை செய்வதைப் பற்றிய கேள்வியே எழும். ஆனால் உங்களிடம் மூளையே இல்லை; இந்த வாழ்க்கை என்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியவில்லை. எனவே நாங்கள் மூளையைக் கொடுக்கும் இயக்கமே தவிர, மூளைச்சலவை செய்யும் இயக்கம் அல்ல." இந்தக் கருத்தைப் பொறுத்தவரை. "உங்கள் மூளை எங்கே? உங்களால்... உயிரற்ற ஒரு மனிதனுக்கும் உயிருள்ள ஒரு மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூட உங்களால் விளக்க முடியவில்லை. உங்களிடம் எத்தனையோ பெரிய பெரிய விஞ்ஞானிகள், தத்துவஞானிகள் இருக்கிறார்கள். (இருந்தும்) உங்களுக்குத் தெரியவில்லை. அப்படியானால் உங்கள் மூளை எங்கே? முதலில் உங்கள் மூளையைச் செலுத்துங்கள் (பயன்படுத்துங்கள்); அதன் பிறகுதான் சலவை செய்வதா அல்லது... என்ற கேள்வியே வரும். எனவே இது மூளைச்சலவை அல்ல; இது மூளையைக் கொடுக்கும் இயக்கம்." |
| 770217 - உரையாடல் - மாயாப்பூர் |