TA/770214c - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நாம் அதீரராக இருக்கக் கூடாது. அதுவே கிருஷ்ண உணர்வின் பூரணத்துவம் ஆகும். அதீரர் என்றால் பௌதிக உலகில் நிலைத்திருப்பது என்று பொருள். நாம் அதீரராக இருக்கும் வரை, மீண்டும் வீட்டிற்கு, அதாவது பகவானிடம் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு இல்லை. தீரராக இருப்பதே தவம் ஆகும். நாம் அதீரராக மாறுவதற்குப் பல காரணங்கள் வரலாம், ஆனால் அந்த காரணங்கள் நம்மைத் தொந்தரவு செய்யக் கூடாது—அப்போதுதான் நாம் தீரர் ஆக முடியும். தீரதீர-ஜன-ப்ரியௌ ப்ரிய-கரௌ. ஹரிதாஸ தாகூர் அதற்குச் சிறந்த உதாரணம், அவர் ஒரு தீரராக இருந்தார். அவருக்கு போதுமான காரணங்கள், தூண்டுதல்கள் இருந்தன. அவர் ஒரு இளைஞர், நள்ளிரவில் ஒரு அழகான இளம் விலைமகள் வந்து ஹரிதாஸ தாகூரிடம் தன் உடலை அர்ப்பணித்தாள். அதற்கு அவர், "ஆம், மிகச் சிறந்த முன்மொழிவு. நீங்கள் உட்காருங்கள். என் ஜெபத்தை முடிக்க விடுங்கள். நான் மகிழ்வேன்." இதுவே தீர குணமகும்." |
| 770214 - உரையாடல் C - மாயாப்பூர் |