TA/770211 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நாம் பொறாமைப்படுபவர்களிடமிருந்து விலகி இருக்க முயற்சிக்கும்போது, அது நம்முடைய பொறாமை குணம் அல்ல. அது பிரச்சாரப் பணிக்கான இன்னல்களைத் தவிர்ப்பதற்காக மட்டுமே. நாம் அவர்களை வெறுக்கிறோம் என்று அர்த்தமல்ல. ஆனாலும் ஏனென்றால்... நீங்கள் ஒரு பாம்பைத் தவிர்க்கும்போது, நான் பாம்பை வெறுக்கிறேன் என்று அர்த்தமல்ல, மாறாக அது தீங்கு விளைவிப்பது என்பதால் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பாகவதத்தின் கூற்று ஆகும். மேலும் நீங்கள் முதல் நிலை மஹா-பாகவத நிலைக்கு (பரமஹம்ஸ நிலைக்கு) வரும்போது, அங்கே யாரும் எதிரியும் இல்லை, யாரும் நண்பனும் இல்லை. எல்லாரும்... அதை நம்மால் போலி செய்ய முடியாது. அது முடியாது... ஒரு பிரச்சாரகர் மஹா-பாகவதராக இருந்தாலும், அவர் இரண்டாவது நிலைக்கு கீழே இறங்கி வருகிறார். என்னுடைய குரு மஹாராஜாவைப் போல, அவர் மஹா-பாகவதர் தான், ஆனாலும் அவர் இரண்டாவது நிலைக்கு வர வேண்டியிருந்தது, அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. அது இயல்பானது." |
| 770211 - உரையாடல் - மாயாப்பூர் |