Jump to content

TA/770210 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்தக் கெட்ட பழக்கங்களான காமம், குரோதம் — காமம் என்றால் இச்சை; குரோதம் என்றால் கோபம் — இவையும் கடவுளிடமிருந்தே வருகின்றன என்றால், அவற்றை நாம் எவ்வாறு புறக்கணிக்க முடியும்? எவ்வாறு நிராகரிக்க முடியும்? எனவே, அவற்றை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. அதுதான் நரோத்தம தாஸ தாகூரின் . . . உங்களால் நிராகரிக்க முடியாது. அது சாத்தியமில்லை. நீங்கள் ஒரு ஜீவராசியாக இருப்பதால், நிச்சயமாகக் காமம், குரோதம், லோபம் (பேராசை), மோகம் (மயக்கம்), மாத்ஸர்யம் (பொறாமை) ஆகியவை இருக்கத்தான் செய்யும். அவற்றை உங்களால் நிராகரிக்க முடியாது. அவற்றைப் பூஜ்ஜியமாக்க முடியாது. அது நிர்குணவாதம் (அருவவாதம்) ஆகும். ஆனால், அவற்றிற்குரிய சரியான பயன்பாடு உள்ளது. அதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றின் சரியான பயன்பாட்டையும் நீங்கள் அறியாதவரை . . . சரியான பயன்பாடு என்றால், அது கிருஷ்ணருக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே. அப்போதுதான் அது சரியான பயன்பாடாகும். இல்லையெனில், அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கெட்டது என்று எதுவுமே இல்லை. கிருஷ்ணருக்காகப் பயன்படுத்தப்படும்போது எல்லாமே நல்லதுதான். அதுதான் பௌதிகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு. ஆன்மீகத்தில் எல்லாமே நல்லது, பௌதிகத்தில் எல்லாமே கெட்டது."
770210 - சொற்பொழிவு SB 07.09.01 - மாயாப்பூர்