Jump to content

TA/770208 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சூரியன் வானத்தில் எப்போதும் இருப்பது போலவே, அது காலையில் தோன்றுவதையும், மாலையில் மறைவதையும் நாம் காண்கிறோம். அது நம் கண்களின் பலவீனமே தவிர வேறில்லை. உண்மையில், சூரியன் எப்போதும் அங்கேயேதான் இருக்கிறது. அதேபோல, கிருஷ்ணர் பூமிக்கு வரும்போது (யதா யதா ஹி தர்மஸ்ய கிளானிர்...), கிருஷ்ணரின் மிக நெருக்கமான சேவகரான வைஷ்ணவரும் தனது எஜமானரின் கட்டளைப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இந்த உலகிற்கு வருகிறார். எனவே, அவர்களுடைய வாழ்க்கையும் கிருஷ்ணரின் வாழ்க்கையும் ஒன்றுதான். அதில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற கேள்வியே இல்லை. நித்யம். 'நித்யோ சாஸ்வதோயம் ந ஹன்யதே ஹன்யமானே சரீரே' (ப.கீ 2.20 (1977)). எனவே, வைஷ்ணவர்களின் திரோபாவமும் (மறைவு) ஆவிர்பாவமும் (தோற்றம்) சூரியன் தோன்றுவதற்கும் மறைவதற்கும் சமமானதே ஆகும்."
770208 - சொற்பொழிவு Festival Appearance Day, Bhaktisiddhanta Sarasvati - மாயாப்பூர்