TA/770207 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நாம் உண்மையாகவே முழுமனதுடன் கிருஷ்ணருக்கு சேவை செய்து கொண்டிருந்தால், 'இந்த மக்கள் மாளிகை போன்ற கட்டிடங்களில் வாழ்கிறார்களே' என்று மக்கள் நம் மீது பொறாமைப்படலாம். பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், 'பக்தர்கள் மட்டுமே மாளிகை போன்ற கட்டிடங்களில் வாழ வேண்டும். பக்தர்கள் மட்டுமே,' என்று கூறினார். அரசாங்க ஊழியர்களைப் போல. அரசாங்க ஊழியர்களுக்கு தங்குவதற்கு மிகச் சிறந்த இடம் வழங்கப்படுகிறது. அதேபோல், பக்தர்களாக இருப்பவர்களுக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும். ஆடம்பரம் அல்ல, வீண் விரயம் அல்ல, ஆனால் நல்ல உணவு, நல்ல இடம், நல்ல வசதிகள், மற்றும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பது. இதுதான் நம்முடைய வைஷ்ணவ... இது வறட்டுத்தனமானது அல்ல. எங்களுடைய குறிக்கோள் என்னவென்றால், நாங்கள் அனைவரையும் அழைக்கிறோம், 'இங்கே வாருங்கள், வசதியாக வாழுங்கள், ஹரே கிருஷ்ண என்று ஜெபியுங்கள்.' புலனின்பங்களுக்கு அடிமையாகிவிடாதீர்கள், ஆனால் மிகவும் அழகாக வாழ்ந்து கிருஷ்ணருக்கு சேவை செய்யுங்கள். இதுவே எங்களது குறிக்கோள்." |
| 770207 - சொற்பொழிவு Arrival - மாயாப்பூர் |