TA/770202c - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குணா (ஶ்ரீ.பா 5.18.12(1977)). பகவானுடைய பக்தராக இல்லாத எவரும், அவரது வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் இருக்கிறார். அவருக்கு எந்த மதிப்பும் இல்லை. அவர் துஷ்க்ருதினஹ் (பாவம் செய்பவர்), மூடாஹ் (முட்டாள்), நராதம (மனிதர்களில் மிகக் கடைசியானவர்), மாயயாபஹ்ருத (மாயையால் அறிவு கவரப்பட்டவர்) என்று இவ்வளவு தூரம் கண்டிக்கப்படும்போது, அவர் என்னவாக இருக்க முடியும்? மிகவும் கண்டிக்கத்தக்கவர். மிகவும் குறும்புக்காரர், ஏமாற்றுக்காரர், கழுதை, மனிதகுலத்திலேயே மிகக் தாழ்ந்தவர். அவர் எத்தனையோ பட்டங்களைப் பெற்றிருக்கலாம், ஆனால் மாயயாபஹ்ருத-ஞானாஹ்—அவரது அறிவு மாயையால் பறிக்கப்பட்டுவிட்டது, எல்லாம் முடிந்தது. அவர் அவ்வளவு தூரம் கண்டிக்கப்படுகிறார். எனவே, கிருஷ்ண உணர்வைப் பற்றி அறிவு இல்லாத எவருக்கும், நாம் எந்தவொரு பதவியையும் தருவதில்லை. எந்தவொரு பதவியும் இல்லை." |
| 770202 - உரையாடல் B - புவனேஸ்வர் |