TA/770202 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே நோய் அங்கே இருக்கிறது, ஆனால் அதற்கான மருந்தும் அங்கே உள்ளது. சேதோ-தர்பண-மார்ஜனம் (சை. ச அந்திய 20.12(1977)). நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். மனித சமுதாயம், ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் எல்லாவற்றையும் சரிசெய்ய முயற்சிக்கிறது, ஆனால் அது சாத்தியமில்லை. ஐக்கிய நாடுகள் சபையினால் அதைச் செய்ய முடியாது. மெல்போர்னில் நான் பேசிக் கொண்டிருந்தபோது, ஐக்கிய நாடுகள் சபையை "குரைக்கும் நாய்களின் கூட்டம்" என்று குற்றம் சாட்டினேன். ஏனென்றால், உங்களால் இந்த பௌதிகத் தளத்தில் ஒன்றுபட முடியாது. 'நான் ஒரு நாய்', 'நான் ஒரு புலி', 'நான் ஒரு அமெரிக்கன்', 'நான் ஓர் இந்தியன்', 'நான் ஒரு பிராமணன்', 'நான் ஒரு சூத்திரன்' என்று உங்களை நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வரை, அங்கே ஐக்கிய நாடுகள் சபை என்ற பேச்சுக்கே இடமில்லை." |
| 770202 - சொற்பொழிவு Festival Foundation Stone Ceremony - புவனேஸ்வர் |