Jump to content

TA/770131 - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் அனைவரும் இறைவனின் பின்னப் பகுதிகள் (அங்கங்கள்) என்பதுதான் நம்முடைய நிலை. இறைவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர், ஆனந்தமயமானவர். எனவே, அவருடைய அங்கமாகிய நாமும் ஆனந்தமயமாகவே இருக்க வேண்டும். ஆனால், மனஹ் ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி(ப.கீ 15.7 (1977)). நான் இந்த பௌதிக உலகிற்கு வந்திருக்கிறேன். மனதின் மூலம் பலவிதமான கொள்கைகளை ('இசம்') உருவாக்கி, புலன்களால் செயல்படுகிறேன், அதனால் இங்கே ஒரு போராட்டம் நிலவுகிறது. இதுதான் அது... அனைத்தும் இங்கே இருக்கிறது. மனஹ் ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி. பௌதிகச் சூழலில் வாழும் மனிதன், இங்கே வெறும் போராட்டத்தையே சந்திக்கிறான். எனவேதான் நாங்கள் இதற்கு ஒரு தீர்வை வழங்குகிறோம், 'இந்த போராட்டத்தைக் கைவிடுங்கள். மீண்டும் வீட்டிற்கு, இறைவனிடமே திரும்பிச் செல்லுங்கள்'."
770131 - உரையாடல் C - புவனேஸ்வர்