TA/770129d - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இந்த பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் தொடர்ச்சியை நாம் நிறுத்த விரும்பினால், மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது கட்டாயமாகும். "கடவுள் யார்? அவரோடு எனக்கு என்ன உறவு?" என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து நாம் விடுதலை பெற முடியும். அந்த செயல்முறையை பகவான் அவரே விவரிக்கிறார், அதாவது மய்யாஸக்தமனாஹ். பகவான் மீது உங்களுடைய பற்றை நீங்கள் அதிகரிக்க வேண்டும். ஆஸக்த என்றால் பற்று என்று பொருள். பகவான் மீது உங்களுக்கு இருக்கும் பற்றை நீங்கள் அதிகரிக்க வேண்டும். (இடைவேளை) . . .பரிந்துரைக்கப்பட்ட செயல்முறை, இதன் மூலம் நீங்கள் பகவானைப் புரிந்து கொள்ள முடியும். கடவுள் அல்லது கிருஷ்ணர் மீதான நம் பற்றை அதிகரிக்கும் இந்த செயல்முறைக்கு 'பக்தி யோகம்' என்று பெயர்." |
| 770129 - சொற்பொழிவு BG 07.01 - புவனேஸ்வர் |