TA/770128 - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "உண்மையில் என் குரு மகாராஜாவிற்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அந்த ஆயிரக்கணக்கான சீடர்களில், நடைமுறையில் நான் கொஞ்சம் வெற்றியடைந்திருக்கிறேன். அது அனைவருக்கும் தெரியும். ஏன்? ஏனென்றால் நான் என் குருவின் வார்த்தைகளை உறுதியாக நம்பினேன். அவ்வளவுதான். இதுதான்... இன்னும் பல ஆன்மீக சகோதரர்கள் இருக்கலாம், அவர்கள் மிகவும் கற்றறிந்தவர்களாகவும், மிகவும் முன்னேறியவர்களாகவும், சாதகமானவர்களாகவும் இருக்கலாம்... மேலும் ஒவ்வொருவரும் 'நான் தான் மிகவும் பிடித்தமானவன்' என்று உரிமை கோருகிறார்கள். ஆனால் நடைமுறை கண்ணோட்டத்தில்... எனவே நான் சில சமயங்களில் 'இந்த அற்புதமான விஷயம் எனக்கு ஏன் நடந்தது?' என்று யோசிப்பதுண்டு. நான் தேடிப் பார்க்கிறேன். நான் தேடிப் பார்த்ததில், என் ஆன்மீக குருவின் வார்த்தைகளை நான் நூறு சதவீதம் நம்பினேன் என்பதைத் தவிர வேறு எதையும் கண்டறியவில்லை... அவ்வளவுதான், வேறு எதுவும் இல்லை. குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கொரியா ஐக்ய, ஆர நா கொரிஹோ மனே ஆஷா. எந்த ஒரு தேவையற்ற விஷயத்தையும் நினைக்காதீர்கள். உங்கள் குரு என்ன சொன்னாரோ அதை அப்படியே செயல்படுத்துங்கள். அதுவே வெற்றி." |
| 770128 - உரையாடல் A - புவனேஸ்வர் |