TA/770126c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஜெகந்நாதபுரி இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே நாம் பக்தி நெறியை சரியான திசையில் உள்வாங்கி, நம் வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றிக்கொண்டு, இந்த அறிவை, இந்த பக்தி நெறியை உலகம் முழுவதும் விநியோகிக்க வேண்டும். அதுவே சைதன்ய மஹாபிரபுவின் உன்னத நோக்கமாகும். 'ஜன்ம ஸார்தக கரி பர உபகார.' தற்கால நாகரிகம் மிகவும் கொடூரமான நச்சு நாகரிகமாகும். ஏனெனில், இந்த மனித வடிவிலான வாழ்க்கையில்தான், 'அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா'—அதாவது பரம்பொருளைப் பற்றி விசாரிப்பதற்கான அறிய வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டால்... இந்த உன்னத அறிவு இந்தியாவில் உள்ளது. இது மறுக்கப்பட்டால், அது ஒரு நல்ல மனித சமுதாயமாக இருக்க முடியாது. எனவே இங்கு கூடியிருக்கும் கற்றறிந்த அறிஞர்களே, பண்டிதர்களே, உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்துடன் ஒத்துழையுங்கள், நாம் அனைவரும் இணைந்து ஜெகந்நாதரின் பக்தி நெறிக்காகப் பாடுபடுவோம்." |
| 770126 - உரையாடல் Address - ஜெகந்நாதபுரி |