TA/770126b - ஶ்ரீல பிரபுபாதர் ஜெகந்நாதபுரி இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "சைதன்ய மஹாபிரபு . . . யாரே தேக்க தாரே கஹ 'கிருஷ்ண'-உபதேச (சை.ச மத்திய 7.128(1977)) "நீங்கள் குருவாகுங்கள். எந்த தகுதியும் தேவையில்லை. கிருஷ்ணர் என்ன சொன்னாரோ அதை அப்படியே திரும்பச் சொல்லுங்கள்." எவ்வளவு எளிமையாக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள். எந்தவொரு அர்த்தமற்ற பேச்சையும் பேச வேண்டாம். யாரே தேக்க தாரே கஹ 'கிருஷ்ண'—அவ்வளவுதான். எனவே இதை யாரால் செய்ய முடியாது? ஒரு குழந்தையால் கூட இதைச் செய்ய முடியும். (சிரிக்கிறார்) நம் சியாமசுந்தரரின் மகள், அவள் பிரசாரம் செய்து கொண்டிருந்தாள், "உங்களுக்கு கிருஷ்ணரைத் தெரியுமா?" என்று கேட்டாள். அவர்கள், "இல்லை, எனக்குத் தெரியாது . . ." என்றார்கள். "அவர்தான் முழுமுதற் கடவுள்." இதுதான் பிரசாரம், "கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள், அவரே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர். அவருக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்" என்று நீங்கள் சொன்னால் மட்டும் போதும். இதில் என்ன கடினம் இருக்கிறது? யாராலும் பிரசாரம் செய்ய முடியும். ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபியுங்கள். அவ்வளவுதான். மூன்று வார்த்தைகள்: கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள், அவரிடம் சரணடையுங்கள், மற்றும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபியுங்கள். உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக மாறும்." |
| 770126 - உரையாடல் A - ஜெகந்நாதபுரி |