Jump to content

TA/770124c - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் கிருஷ்ணரின் வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்தால், உலக வரலாற்றிலேயே கிருஷ்ணரை விட செல்வந்தரோ, கிருஷ்ணரை விட பலசாலியோ, கிருஷ்ணரை விட அழகானவரோ, அல்லது கிருஷ்ணரை விட அதிக அறிவும், தத்துவ ஞானமும் கொண்டவரோ யாரும் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் எல்லாவற்றையும் கண்டுகொள்ளலாம். ஆறு ஐஸ்வரியங்களும் (செல்வங்களும்) கிருஷ்ணரிடம் முழுமையாக பிரதிபலிக்கின்றன; எனவே தான் அவர் 'பகவான்' என்று அழைக்கப்படுகிறார். 'பக' என்றால் ஐஸ்வரியங்கள் என்றும், 'வான்' என்றால் அதை உடையவர் என்றும் பொருள். கிருஷ்ணர் இந்த ஆறு ஐஸ்வரியங்களையும் கொண்டிருப்பதால் தான் அவர் அனைவரையும் ஈர்க்கக்கூடியவராக இருக்கிறார், இதுவே கிருஷ்ணர் என்ற பெயரின் பொருள். இதுதான் கிருஷ்ணரைப் பற்றிய விளக்கமாகும்."
770124 - சொற்பொழிவு CC Madhya 08.128 - புவனேஸ்வர்