TA/770124b - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஹா ஹந்த ஹா ஹந்த விஷ-பக்ஷண . . . ஆன்மீகப் புரிதலில் முன்னேற விரும்பும் ஒருவருக்கு, விஷம் குடிப்பதை விட இந்த உடலுறவு வாழ்க்கை மிகவும் ஆபத்தானது என்று சைதன்ய மஹாபிரபு கூறினார். ஆனால் அவர்களோ—'உடலுறவே பூரணத்துவத்திற்கான வழி' என்று எடுத்துக் கொள்கிறார்கள். சைதன்ய மஹாபிரபு கூறினார்: ஹா ஹந்த ஹா ஹந்த விஷ-பக்ஷண அப்ய அஸாது. ஒருவன் விஷம் அருந்தினால், அது ஒரு குற்றமாகும். எனவே பக்தி வாழ்க்கையில் இந்த உடலுறவு இன்பம் என்பது விஷம் அருந்துவதை விட, குற்றச் செயலை விட மிகவும் ஆபத்தானது. அதுவே சைதன்ய மஹாபிரபுவின் . . . ஆனால் சஹஜியாக்கள், உடலுறவு மூலமாகவே தங்கள் வாழ்க்கை . . . எந்த கோஸ்வாமி? ஜெயதேவ கோஸ்வாமி, சண்டிதாஸர். ஜெயதேவ கோஸ்வாமி, சண்டிதாஸர் ஆகியோரின் நூல்களைப் படித்துவிட்டு, 'ஓ, உடலுறவு மூலமாக ஒருவன் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும்' என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பிருந்தாவனத்தில் பகிரங்கமாகவே சொல்கிறார்கள், 'நான் கிருஷ்ணர்; நான் பரகீய ரஸத்தில் இருக்கிறேன். உன்னுடைய மனைவியாக இல்லாத, உன்னுடன் வாழும் ஒரு பெண்ணை நீ பரகீயமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று." |
| 770124 - உரையாடல் B - புவனேஸ்வர் |