Jump to content

TA/770121d - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மக்கள் நாத்திகர்களாக (கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக) மாறி வருகிறார்கள். எவ்வளவு பெரிய வீழ்ச்சி. இராமபிரான் தோன்றினார், கிருஷ்ண பரமாத்மா தோன்றினார், புத்த பிரான் தோன்றினார், சைதன்ய மகாபிரபு தோன்றினார், இன்னும் பலரும் தோன்றினர்; ஆனால் இந்தியாவின் மக்களோ நாத்திகர்களாக மாறி வருகிறார்கள். ஏன்? நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத, ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் (ப.கீ 4.7 (1977)) - எப்பொழுதெல்லாம் தர்மத்திற்குப் பாதிப்பு ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் என்னைப் படைத்துக் கொள்கிறேன். மேலும் அவர் அதை இந்த பிரபஞ்சத்திலேயே இந்தியாவில் செய்கிறார். ஆனால் அவர்கள் இப்போது... இது கலியுகம். மற்ற நாடுகள் அப்படி மாறலாம், ஆனால் இந்தியா, இவ்வளவு பாக்கியம் பெற்ற பிறவி—பாரத பூமிதே ஹைல மனுஷ்ய ஜன்ம(சை. ச ஆதி 9.41(1977)) பாரத பூமியில் மனிதப் பிறவி எடுத்தவர்கள்—அவர்கள் மிகவும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள், எந்தளவுக்கு என்றால் அவர்களே சந்தேகப்பட்டு, கேள்விகள் கேட்கும் அளவிற்கு."
770102 - உரையாடல் B - மும்பாய்