TA/770115 - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இந்த உலகம் முழுவதுமே பாலியல் வாழ்க்கையில் தான் ஆர்வம் காட்டி வருகிறது. பும்ஸ: ஸ்த்ரியா மிதுனீ-பாவம் ஏதத் (ஶ்ரீ.பா 5.5.8(1977)) . இந்த பௌதிக உலகம் இந்த மிதுன-பாவத்தின் (ஆண்-பெண் சேர்க்கையின்) அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே தான், தமோ-த்வாரம் யோஷிதாம் ஸங்கி-ஸங்கம் என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக, வேத கால வாழ்க்கை நெறிமுறைகளில் பாலியல் இன்பங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததை நீங்கள் காணலாம். மிகவும் அத்தியாவசியமான தேவையைத் தாண்டி, நாம் பாலியல் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால், நாம் நரகத்தை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள். அதே நேரத்தில், நாம் மகாத்மாக்களின் வழியைப் பின்பற்றி, அவர்களுக்குத் தொண்டு செய்தால் (மஹத்-ஸேவா), அது முக்திக்கான கதவைத் திறக்கும் (த்வாரம் ஆஹுர் விமுக்தே:). நாம் விடுதலையை நோக்கி முன்னேறிச் செல்வோம்." |
| 770115 - சொற்பொழிவு - அலகாபாத் |