TA/770109b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "புத்தகங்களை முடிந்தவரை அதிகமாக அச்சிட்டு, விநியோகிப்பதுதான் நம்முடைய முதன்மையான திட்டம். இதுவே நம்முடைய முக்கிய திட்டம் ஆகும். மற்ற எல்லா திட்டங்களும் இதற்கு அடுத்தபடியானவையே (இரண்டாம் பட்சமே). எனவே, இந்த இலக்கை மனதில் கொண்டு, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுங்கள்.நம்முடைய சைதன்ய-சரிதாம்ருதம் ஒரு தனித்துவமான இலக்கியம் ஆகும். சைதன்ய-சரிதாம்ருதத்தின் காரணமாக, நாம் மற்ற எந்த ஆச்சார்யருக்கும் மேலான இடத்தில் இருக்கிறோம். ராமானுஜாரியர், மத்வாச்சார்யர், விஷ்ணு ஸ்வாமி போன்ற நான்கு ஆச்சார்யர்கள் இருக்கிறார்கள் . . . ஆனால் நம்முடைய கௌடீய வைஷ்ணவ, சைதன்ய மகாபிரபுவின் பாரம்பரிய ஆச்சார்ய முறை தனித்துவமானது.அனர்பித-சரீம் சிராத் கருணயாவதீர்ண கலௌ. இங்கே முழுமுதற் கடவுளே நேரில் வந்து ஆச்சார்யராகக் கற்பிக்கிறார். அனர்பித-சரீம் சிராத் கருணயாவதீர்ண கலௌ சமர்பயிதும் உன்னதோஜ்வல-ரஸம். மிக உயர்ந்த, உன்னதமான ஆன்மீக ஆனந்தம், மதுர்ய ரஸம். ராதா-கிருஷ்ணரின் இந்த உன்னத உறவுகள், அதாவது மதுர்ய-ரஸம் தான் சைதன்ய மகாபிரபுவின் மிகச்சிறந்த பங்களிப்பாகும்." |
| 770109 - உரையாடல் B - மும்பாய் |