TA/770108c - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பெண்கள்... பெண் குழந்தைகளுக்கு ஒரு உண்மையுள்ள மனைவியாக எப்படி மாறுவது, நல்ல சமையல், சுத்தம் செய்தல், ஆடை உடுத்துதல் ஆகியவற்றை எப்படிக் கற்றுக்கொள்வது என்று கற்பிக்கப்பட வேண்டும். எளிமையான முறை. அவர்கள் அறிஞர்களாக (படித்தவர்களாக) மாறுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் அது அவசியமில்லை. சமையல், சுத்தம் செய்தல், ஆடை உடுத்துதல் ஆகியவற்றின் மூலம் சேவை செய்வதில் அவர்களுக்கு இயல்பான ஈடுபாடு உள்ளது. தூய்மைதான் முதல் தேவை. அது ஆரோக்கியமானது, ஆன்மீகமானது மற்றும் அமைதியானது, நிதானமானது. தூய்மையாக இருப்பதற்கு இந்தியாவுக்குச் சிறப்பு வசதி உள்ளது. இந்த நாட்டில் மட்டும்தான் நீங்கள் மூன்று முறை குளிக்க முடியும். மற்ற நாடுகளில்... அங்கெல்லாம் அது எளிதானது (இலகுவானது). உங்கள் நாட்டில் சுடு தண்ணீர் இருக்கிறது. ஒருவர் பழகிக்கொண்டால் அதில் எந்த சிரமமும் இல்லை. நம் நாட்டு ஆண்களுக்கு அத்தகைய பழக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த தூய்மை என்பது குறைந்தது இரண்டு முறையாவது குளிப்பதாகும். அது ஒரு மனிதனை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும்." |
| 770108 - உரையாடல் E - மும்பாய் |