Jump to content

TA/770107 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வியாஸதேவர் பிறந்தார், சத்யவதிக்கு. அவள் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவள். அவள் ஒரு அரசனுக்குப் பிறந்திருந்தாலும், அவளுடைய தாய் ஒரு தாழ்ந்த குலத்து மீனவப் பெண். ஒரு மீனவர்தான் அவளைத் தன் மகளாக வளர்த்தார். பராசர முனிவர் அவளிடம் ஈர்க்கப்பட்டார், அதன் மூலம் வியாஸதேவர் பிறந்தார். மிக உயர்ந்த வட்டாரங்களில் கூட நடக்கும் பாலியல் விவகாரங்களைப் பாருங்கள். தேவர்களின் ஆன்மீக குருவான பிருஹஸ்பதி, கர்ப்பமாக இருந்த தன் சகோதரனின் மனைவியின் மேல் மிகவும் பித்துப் பிடித்து, அவளுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார். பாருங்கள். இதெல்லாம் உதாரணங்கள். பிரம்மா தன் சொந்த மகளாலேயே ஈர்க்கப்பட்டார். சிவபெருமான் தன் மனைவியின் முன்னிலையிலேயே மோகினி-மூர்த்தியின் அழகால் ஈர்க்கப்பட்டார். எனவே, இந்த பாலியல் வாழ்க்கையை கிருஷ்ண உணர்வுடையவராக மாறுவதன் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் அதற்கு வழியே இல்லை. இந்த பௌதிக உலகில், நாம் கிருஷ்ண உணர்வுள்ளவர்களாக மாறாவிட்டால், பாலியல் தூண்டுதலிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதால் தான் பாகவதம் இதைப் பற்றியெல்லாம் விவாதித்துள்ளது. அது சாத்தியமே இல்லை."
770107 - உரையாடல் A - மும்பாய்