Jump to content

TA/770104b - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மக்களுக்கு கிருஷ்ண உணர்வில் எவ்வாறு ஆர்வம் ஏற்படும் என்பதே எங்களது ஒரே நோக்கம். எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை, பொருளாதாரப் பிரச்சனையும் இல்லை. பொருளாதாரப் பிரச்சனை என்றால்... அது என்ன பொருளாதாரப் பிரச்சனை? நாங்கள் எங்களது சொந்த உணவையும் உடையையும்—ஓரளவேனும்—உற்பத்தி செய்துகொண்டு, ஆன்மீக வாழ்க்கையை வாழ்கிறோம். பண்ணையில் அது எளிதாக இருக்கிறது. ஆனால், மக்கள் வாழ்வாதாரத்திற்காக நகரங்களுக்கு அனுப்பப்பட்டால், அங்கு பெரிய பெரிய சாலைகளும், பெரிய பெரிய கார்களும், பெரிய பெரிய கவலைகளும் உள்ளன. பிறகு மது, இறைச்சி என... தற்கொலை. அவர்களின் ஆன்மீக வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இந்த அறிவற்றவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு ஆன்மீக வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை. நன்றாக உண்பது, குடிப்பது மற்றும் களித்திருப்பதுதான் வாழ்க்கை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் எவ்வாறு தற்கொலை செய்து கொள்கிறார்கள் (தங்களை அழித்துக் கொள்கிறார்கள்) என்பது அவர்களுக்குத் தெரியாது. இயற்கையின் சட்டம் மிகவும் கண்டிப்பானது. அவர்கள் அறிவற்றவர்கள். அவர்களுக்கு முறையான கல்வி இல்லை. இருப்பினும், நாம் முயற்சித்தால், பல மனிதர்களைக் காப்பாற்ற முடியும்."
770104 - உரையாடல் - மும்பாய்