TA/770104 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "உங்களுக்குக் கண்களே இல்லை என்றால், நீங்கள் எப்படி மற்றவர்களை வழிநடத்த முடியும்? நீங்களும் பார்வையற்றவர், அவர்களும் பார்வையற்றவர்கள் என்றால், அவர்களுக்குத் தலைவராவதால் என்ன பயன்? உண்மையில், தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளேயே குருடர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பெரிய, பெரிய தலைவர்களாக ஆகிவிட்டார்கள். அதுதான் தற்போதைய வாழ்க்கையின் துரதிர்ஷ்டம். எனவேதான் எங்கள் கருத்து என்னவென்றால், நீங்கள் கிருஷ்ணரிடமிருந்தும் அவருடைய பிரதிநிதியிடமிருந்தும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும். அவ்வளவுதான். அது உங்களுக்கு உதவும். இதனை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். எங்களுடைய முறை, பரம்பரை முறை என்பது, நான் பக்திசித்தாந்த சரஸ்வதியின் சீடனைப் போன்றவன். நான் முக்தி பெற்றவன் என்று சொல்லவில்லை. நான் கட்டுண்டவன் (கட்டுப்படுத்தப்பட்டவன்). ஆனால் நான் பக்திசித்தாந்தரின் அறிவுரைகளைப் பின்பற்றுவதால், நான் முக்தி பெற்றவன். இதுதான் கட்டுண்ட நிலைக்கும் முக்தி பெற்ற நிலைக்கும் உள்ள வித்தியாசம்." |
| 770104 - காலை உலா - மும்பாய் |