TA/760706e - ஶ்ரீல பிரபுபாதர் வாஷிங்டன் டிசி இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "எனவே, கிருஷ்ணருக்குச் சேவை செய்வது என்பது சோம்பேறித்தனம் அல்ல. ஆன்மீக உணர்வைப் பெறுவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன, குறிப்பாக ஞானம் மற்றும் யோகம். அவை எல்லாம் சரிதான். ஆனால் சுய-உணர்வின் உண்மையான செயல்முறை என்பது சேவை தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக நீங்கள் தத்துவ ஆராய்ச்சி (ஊகம்) செய்தால் . . . நீங்கள் அவ்வாறு செய்யலாம், ஆனால் கடவுளைப் பற்றி அறிந்த பிறகு, கடவுள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நீங்கள் அறியவில்லை என்றால், அத்தகைய அறிவு என்பது வெறும் நேர விரயம் மட்டுமே. அதாவது, நீங்கள் . . . நிச்சயமாக, அது உண்மையான அறிவு அல்ல. உண்மையான அறிவு என்பது—அது விளக்கப்படும்—பகவானுக்கு ஏதேனும் ஒரு சேவையைச் செய்வதற்குத் தூண்டப்படுவதுதான். ஆரம்பத்தில், இது சாந்த-ரசம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது கடவுளின் மகத்துவத்தைப் புரிந்துகொள்வது: 'கடவுள் மகா பெரியவர்'." |
| 760706 - சொற்பொழிவு CC Madhya 20.101 - Washington D.C. |