Jump to content

TA/760602 - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சாஸ்திரம், சாஸ்திர-சக்ஷுஷஹ். நீங்கள் சாஸ்திரங்களின் வழியாகப் பார்க்க வேண்டும். அதுவே எங்கள் அறிவுரை. நம்முடைய அரைகுறையான கருவிகளைக் கொண்டு நாம் பார்ப்பதில்லை. கண்கள் குறைபாடுடையவை. நம்முடைய எல்லா புலன்களும் குறைபாடுடையவைதான். நீங்கள் நுண்ணோக்கி வழியாகப் பார்த்தாலும் சரி, தொலைநோக்கி அல்லது வேறு எந்தக் கருவியின் வழியாகப் பார்த்தாலும் சரி, சரியாகப் பார்ப்பதற்கு அங்கே எந்த வழியும் இல்லை. வழியே இல்லை. இதுதான் விளக்கப்பட்டுள்ளது. எனவேதான் சாஸ்திரம் கூறுகிறது, வேதாந்தம் கூறுகிறது, சாஸ்திர-சக்ஷுஷஹ் என்று. (ப.கீ 15.9 (1976)) 'பஷ்யந்தி ஞான-சக்ஷுஷா' எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, கண்கள் அறிவினால் ஒளியூட்டப்பட வேண்டும். அதுவே உண்மையான கண். இந்த மழுங்கிய கண்கள் உண்மையான கண்கள் அல்ல."
760602 - சொற்பொழிவு SB 06.01.34-36 - ஹானலுலு