Jump to content

TA/760509 - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவரது வீட்டில் தாய் இல்லாமலும், அவருடைய மனைவி 'அப்பிரியவாதினி'யாக (அதாவது, இன்சொல் பேசாதவளாக) இருந்தால்... கணவனிடம் எப்போதும் இன்முகத்தோடு, இனிமையாகப் பேசுவதுதான் மனைவியின் கடமை. அதுவே கணவன்-மனைவி இடையேயான உறவுமுறை. எனவே, சாணக்கிய பண்டிதர் கூறுகிறார்: ஒரு மனைவி கணவன் மீது பற்று இல்லாமலும், அவனிடம் இனிமையாகப் பேசாமலும் இருந்தால்... அதாவது மொத்தத்தில் அவளுக்கு கணவனைப் பிடிக்கவில்லை என்று அர்த்தம். தாய் இல்லாத ஒரு வீட்டில் இப்படிப்பட்ட மனைவி இருந்தால்... இதுதான் 'சிறந்த இந்திய மகிழ்ச்சியான இல்லம்'. (சிரிப்பு) ஆனால் உங்கள் நாடுகளில் இது மிகவும் அரிதான ஒன்று. இதுதான் மகிழ்ச்சிக்கான இலக்கணம். எனவே, வீட்டில் தாயும் இல்லாது, நல்ல மனைவியும் அமையாவிட்டால், 'அரண்யம் தேன கந்தவ்யம்' — அவன் உடனடியாக அந்த வீட்டைத் துறந்துவிட வேண்டும். 'அரண்யம்' என்றால் அவன் காட்டுக்குச் சென்றுவிட வேண்டும். 'ஏன் காட்டுக்குச் செல்ல வேண்டும்? நகரத்தில் எனக்குத்தான் நல்ல வீடும், அழகான கட்டிடமும் இருக்கிறதே!' என்று கேட்கலாம். இல்லை. யாருக்கு நல்ல மனைவியும் இல்லையோ, தாயும் இல்லையோ, அவருக்கு 'யதாரண்யம் ததா கிருஹம்'. அவருக்கு இந்த வீடும் ஒன்றுதான், காடும் ஒன்றுதான்."
760509 - சொற்பொழிவு SB 06.01.08 - ஹானலுலு