TA/760427b - ஶ்ரீல பிரபுபாதர் ஆக்லாண்ட் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஞானம் பெறுவதற்காக நாம் ஒரு உண்மையான ஆன்மீக குருவை அணுக வேண்டும். மேலும் ஸமித்-பாணிஹ் ஷ்ரோத்ரியம்: கற்பனை செய்வதன் மூலம் அல்லாமல், கேட்பதன் மூலம் அறிவைப் பெற்றவர். இக்காலத்தில் கற்பனை செய்வது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. ஆனால் வேதங்களின் கட்டளையோ, "இல்லை. கேட்பதன் மூலம் மட்டுமே," என்று கூறுகிறது. நீங்கள் சரியான நபரை அணுகி அவரிடமிருந்து கேட்க வேண்டும். அதனால்தான் ஒட்டுமொத்த வேத இலக்கியங்களும் 'ஸ்ருதி' என்று அழைக்கப்படுகின்றன. ஒரு நபர் அதிகாரப்பூர்வமான மூலத்திலிருந்து கேட்பதன் மூலம் மிகவும் புத்திசாலித்தனமாக கற்றுக் கொள்ள வேண்டும். இதே உதாரணத்தை நாம் பகவத் கீதையிலும் காண்கிறோம். நேரம் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும் போர்க்களத்தில்கூட, அர்ஜுனன் கிருஷ்ணரிடமிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறான். கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார், அர்ஜுனன் கேட்கிறான். எனவே, இந்த கேட்கும் செயல்முறைதான் நம்முடைய வேத வழிமுறையாகும்." |
| 760427 - சொற்பொழிவு CC Madhya 20.98-102 - ஆக்லாண்ட் |