Jump to content

TA/760426 - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வேத நாகரிகத்தின்படி, பசு தாயாகக் கருதப்படுகிறது. ஏன் தாயாகக் கருதக்கூடாது? அவள் நமக்கு பால் வழங்குகிறாள். தாய் ஏன் மரியாதைக்குரியவள்? நாம் ஏன் நமது தாய்க்கு மரியாதை செலுத்துகிறோம்? ஏனெனில், நீங்கள் திகைத்துப்போய், எதையும் சாப்பிட முடியாத குழந்தையாக இருக்கும்போது, தாய் தன் மார்பகத்திலிருந்து பால் புகட்டுகிறாள். யார் உணவளிக்கிறார்களோ அவரே தாய். எனவே, பசு நமக்கு உணவையும், சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்த பாலையும் வழங்குவதால், அவளும் நமது தாயே ஆவாள். வேத நாகரிகத்தின்படி, சாஸ்திரங்களில் ஏழு தாய்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஏழு தாய்கள். முதல் தாய், யாருடைய கருப்பையிலிருந்து நாம் பிறப்பெடுத்தோமோ அந்தப் பெற்ற தாய். ஆதௌ மாதா — இவளே உண்மையான (பெற்ற) தாய். குரு-பத்னி, அதாவது ஆன்மீக குரு அல்லது ஆசிரியரின் மனைவி, அவரும் ஒரு தாய். ஆதௌ மாதா குரு-பத்னி பிராமணி. ஒரு பிராமணரின் மனைவி, அவரும் தாயாவார். உண்மையில், ஒரு பண்பட்ட மனிதன் தன் சொந்த மனைவியைத் தவிர மற்ற அனைத்துப் பெண்களையும் தாயாகவே பார்க்கிறான். ஏழு எட்டு என்றில்லை— அனைவரும் அவனுக்குத் தாயே."
760426 - சொற்பொழிவு BG 09.10 - மெல்போர்ன்