Jump to content

TA/760404b - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"விடுதலைக்கான (முக்திப் பேற்றிற்கான) பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட மந்திரங்கள் உள்ளன. ஓங்கார-ஸர்வ-வேதேஷு. ஒவ்வொரு வேத மந்திரமும் ஓங்காரத்துடன் தான் தொடங்குகிறது, மேலும் அந்த ஓங்காரம் கிருஷ்ணரே ஆவார். வேத மந்திரங்கள் . . . நாம் வேத மந்திரங்களை உச்சரிக்கிறோம். உபநிடதங்கள், தந்திரங்கள், சம்ஹிதைகளில் பலப்பல வேத மந்திரங்கள் உள்ளன. எனவே, அவை 'அ', 'உ', 'ம' ஆகிய எழுத்துக்களின் சேர்க்கையான 'ஓம்' என்ற சொல்லுடன் தொடங்குகின்றன. ஓம் தத் விஷ்ணும் பரமம் பதம் சதா பஸ்யந்தி சூரயஹ (ரிக் வேதம்). எல்லாமே அப்படித்தான். ஓம் நமோ பகவதே வாசுதேவாய. ஒவ்வொரு வேத மந்திரமும் ஓங்காரத்துடன் தொடங்குகிறது. சிலருக்கு ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிப்பதை விட ஓங்காரத்தை உச்சரிப்பதில் தான் அதிக விருப்பம் இருக்கும். அவ்வாறு இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. கிருஷ்ணர் கூறுகிறார், ப்ரணவஹ் ஸர்வ-வேதேஷு(ப.கீ 7.8 (1976)). பிரணவம் என்றால் ஓங்காரம் என்று பொருள்."
760404 - சொற்பொழிவு SB 07.09.49 - விருந்தாவனம்