Jump to content

TA/760319b - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம்முடைய வேத நாகரிகம் கூறுகிறது, 'நாரீ-ரூபம் பதி-வ்ரதம்': 'ஒரு பெண் தன் கணவனுக்குப் பணிந்து (அடிமையாக) இருக்கும்போதுதான் அழகாக இருக்கிறாள்.' அதுவே அழகு, அவளது தனிப்பட்ட உடல் அழகு அல்ல. தன் கணவனுக்குப் பணிந்து நடப்பதை அவள் எவ்வளவு தூரம் கற்றுக்கொண்டிருக்கிறாள் என்பதுதான் வேத நாகரிகம். 'கோகிலானாம் ஸ்வரோ ரூபம்'. குயில் ஒரு கருப்புப் பறவை, ஆனால் மக்கள் ஏன் அதை விரும்புகிறார்கள்? அதன் இனிமையான குரலினால். 'கோகிலானாம் ஸ்வரோ ரூபம் வித்யா-ரூபம் குரூபணம்' (சாணக்கிய பண்டிதர்). ஒரு மனிதன் பார்க்கக் குரூபியாக, கருப்பாக இருக்கலாம், ஆனால் அவன் கற்றறிந்தவனாக இருந்தால், அனைவரும் அவனுக்கு மதிப்பளிப்பார்கள். மேலும், 'நாரீ-ரூபம் பதி-வ்ரதம்'. ஒரு பெண்ணின் அழகு என்பது அவள் தன் கணவனிடம் எவ்வளவு தூரம் பக்தியுடனும் கீழ்ப்படிதலுடனும் இருக்கிறாள் என்பதில் தான் உள்ளது."
760319 - காலை உலா - மாயாப்பூர்