Jump to content

TA/760319 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இது ஒன்று மட்டுமே மருந்து. இந்த ஜட உலகத் தொற்றிலிருந்து விடுபட, இந்த 'ஹரேர் நாம' (ஹரியின் திருநாமம்) மட்டுமே ஒரே மருந்து, பவௌஷதி. 'ஔஷதி' என்றால் மருந்து என்று பொருள். பரீக்ஷித் மகாராஜா, இந்த ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பது பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கானது (கட்டுண்ட ஆத்மாக்களுக்கானது) என்று கூறினார்; ஏனெனில் ஒருவன் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை உச்சரித்த உடனே, அவன் தீமையான மற்றும் தொற்றுநோயான சூழ்நிலையிலிருந்து உடனடியாக விடுபடுகிறான். ஒரு ஸ்லோகம் உள்ளது, 'ஏக ஹரி நாமே யதோ பாப ஹரே, பாபி ஹய ததோ பாப கரி பாரே நாரே'. ஒருமுறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், வாழ்க்கையின் அனைத்து பாவ விளைவுகளும்—உடனடியாக நீங்கிவிடுகின்றன."
760319 - சொற்பொழிவு SB 07.09.41 - மாயாப்பூர்