Jump to content

TA/760316 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு பக்தரின் தகுதிகளுள் ஒன்று தக்ஷ', அதாவது திறமை என்பதாகும். இருபத்தாறு தகுதிகளில், ஒரு பக்தர் எதையும் கையாள்வதில் எப்போதும் மிகுந்த திறமைசாலியாக இருப்பார். அவர்கள் பௌதிக விஷயங்களைத் துறந்துவிட்டார்கள் என்பதால், பௌதிகப் பொருட்களை எவ்வாறு கையாள்வது என்று அவர்களுக்குத் தெரியாது என்று அர்த்தமல்ல. ரகுநாத தாஸ கோஸ்வாமி அதைச் செய்துகாட்டினார். ஒருவேளை உங்களுக்கு அந்த கதை தெரிந்திருக்கலாம். அது அரசியல் சார்ந்தது. பௌதிக விஷயங்களுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லாதிருந்த போதிலும், ஒரு அரசியல் ஆதாயம் அல்லது சூழல் ஏற்பட்டபோது, அவர் ஒரு இளைஞராக இருந்தபோதே அதை மிக நேர்த்தியாகக் கையாண்டார். எனவே, பக்தர்கள் பௌதிக விஷயங்களில் ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தாலும், கிருஷ்ணருக்காக அவர்கள் பௌதிகப் பொருட்களை மிகவும் திறமையாகக் கையாளுவார்கள். அதுவே ஒரு பக்தரின் தகுதியாக இருக்க வேண்டும்: 'திறமை'. 'எனக்கு இந்த பௌதிக விஷயங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை' என்று (ஒதுங்கி) இருப்பது அல்ல. இல்லை."
760316 - உரையாடல் - மாயாப்பூர்