TA/760308 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நாம் வரம்பிற்குட்பட்டவர்கள், அல்லது நமது அறிவு வரம்பிற்குட்பட்டது, குறைபாடுடையது, எனவே நாம் வாதாடக் கூடாது. வேதங்களில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் வாதாடினால், தேவையில்லாத முரண்பாடுகளைக் காண்போம், மேலும் நாம் தவறாக வழிநடத்தப்படுவோம். வாதாட வேண்டாம். அங்கே கேள்விக்கே இடமில்லை . . . வேத-வசனம். வேத-வசனம் என்றால் வேத-பிரமாணம், ஸ்ருதி-பிரமாணம் என்று பொருள். இதுவே வேத நாகரிகத்தின் வழிமுறையாகும். வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டி உங்களால் எதையாவது நிரூபிக்க முடிந்தால், நீங்கள் வெற்றியாளர் ஆவீர்கள். வேத-பிரமாணம். ஸ்ருதி-பிரமாணம். பல சான்றுகள் உள்ளன, ஆனால் முதல் தரமான சான்று ஸ்ருதி-பிரமாணம் ஆகும். ஸ்ருதி-ஸ்மிருதி-புராணாதி-பாஞ்சராத்ரிகி-விதிம் வினா (பக்தி-ரஸாம்ருத-ஸிந்து 1.2.101)." |
| 760308 - சொற்பொழிவு SB 07.09.30 - மாயாப்பூர் |