TA/760305 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "நாம் எவ்வளவு தூரம் சரணடைந்திருக்கிறோம், எவ்வளவு தூரம் பௌதிக (உலகியல்) இன்பங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை கிருஷ்ணரால் நம் மனதிற்குள் பார்க்க முடியும். எனவே, மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், நாம் எல்லாவற்றையும் பூஜ்ஜியமாக்க வேண்டும். அன்யாபிலாஷிதா-சூன்யம் (பக்தி-ரசாம்ருத-சிந்து 1.1.11). 'சூன்யம்' என்றால் பூஜ்ஜியம் என்று பொருள். நாம் எல்லாவற்றையும் பூஜ்ஜியமாக்கி, கிருஷ்ணரை மட்டுமே உண்மையாகக் கொள்ளாதவரை... கிருஷ்ணர் மட்டுமே ஒரே உண்மை, மற்றவை அனைத்தும் பூஜ்ஜியம். கிருஷ்ணர் இல்லாமல், அனைத்தும் பூஜ்ஜியமே.
எப்படியென்றால், ஒன்று என்பது ஒன்றுதான், பூஜ்ஜியம் என்பது பூஜ்ஜியம்தான். ஆனால் ஒன்றின் பக்கத்தில் பூஜ்ஜியம் சேரும்போது, அது உடனடியாக பத்தாக மாறுகிறது—பத்து மடங்கு ஆகிறது. அதேபோல, இந்த பௌதிக உலகம் ஒரு பூஜ்ஜியம், கிருஷ்ணர் ஒன்று. இந்த பௌதிக உலகத்தை உங்கள் சொந்த முயற்சியால் அனுபவிக்க நீங்கள் விரும்பினால், அது எப்போதும் பூஜ்ஜியமாகவே முடியும். நீங்கள் ஒருபோதும் திருப்தியடைய மாட்டீர்கள். ஆனால், இந்த பூஜ்ஜியத்தை கிருஷ்ணரின் பக்கத்தில் சேர்த்தால், நீங்கள் எல்லையற்ற முறையில் அனுபவிக்கலாம், பத்து மடங்கு. பத்து மடங்கு! பூஜ்ஜியத்தோடு பூஜ்ஜியம் சேர்ந்தால் அது பூஜ்ஜியமே, ஆனால் அது கிருஷ்ணரோடு சேர்க்கப்படும்போது, அது பத்து மடங்கு ஆகிறது." |
| 760305 - சொற்பொழிவு SB 07.09.27 - மாயாப்பூர் |