TA/760304 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "ஒருவர் கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொண்டால், அவர் சத்துவ குணத்தை (பிராமண தகுதியை) தாண்டிவிட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் தாழ்ந்த குடும்பத்திலிருந்து வரும் ஒருவருக்கு நாம் ஏன் பூணூல் (இரண்டாம் தீக்ஷை) வழங்குகிறோம்? ஏனெனில், ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஜெபிப்பதன் மூலமும், ஆன்மீக நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், அவர் ஏற்கனவே சத்துவ குணத்தின் நிலைக்கு வந்துவிட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அது பொய்யாக இருந்தால், இரண்டாம் தீக்ஷை அளிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் கண்டிப்பாக அந்த நிலைக்கு வந்திருக்க வேண்டும். நம்முடைய இந்த செயல்முறை 'இதைச் செய்யாதே, அதைச் செய்' என்பதாகும். ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை பதினாறு மாலைகள் ஜெபியுங்கள், மேலும் இதைச் செய்யாதீர்கள்—தகாத பாலுறவு கூடாது, மாமிசம் உண்ணக்கூடாது. அதாவது அவர் தூய்மையடைந்து வருகிறார் என்று அர்த்தம். அவர் ரஜோ குணம் மற்றும் தமோ குணத்தின் அழுகிய நிலையிலிருந்து தூய்மையடைந்து வருகிறார். ஆனால் அவர் அப்படி தூய்மையடையவில்லை என்றால், அவருக்கு இரண்டாம் தீக்ஷை வழங்கப்படக் கூடாது. இதுவே விதியாக இருக்க வேண்டும்." |
| 760304 - சொற்பொழிவு SB 07.09.26 - மாயாப்பூர் |