TA/760226 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "உங்களால் உங்கள் குடும்பத்திற்கோ, உங்கள் சமூகத்திற்கோ, உங்களுடைய... இல்லை, உங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது. அது சாத்தியமில்லை. அவர்கள் இறந்தே தீர வேண்டும். அவர்கள் மாயையின் வலையில் சிக்கியே தீர வேண்டும். உங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் அவர்களைக் காப்பாற்ற விரும்பினால், அவர்களை கிருஷ்ண உணர்வுடையவர்களாக ஆக்குங்கள். அது ஒன்றுதான் ஒரே தீர்வு.
உங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ண உணர்வைக் கொடுத்து அவர்களைக் காப்பாற்றுவதில் நீங்கள் நிபுணராக இல்லை என்றால், நீங்கள்... நீங்கள் ஒரு தந்தையாகவோ தாயாகவோ ஆகக் கூடாது. அதுதான் உண்மையான பிறப்புக்கட்டுப்பாட்டு (கருத்தடை) முறை. 'நாம் தம்பதிகளாக, கணவன்-மனைவியாக திருமணம் செய்து கொண்டோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், என் குழந்தைகளுக்கு மரணமே இல்லாத பாதுகாப்பை வழங்கும் திறன் நமக்கு இல்லையென்றால், நாம் குழந்தைகளைப் பெற்றெடுக்கக் கூடாது.' இதுதான் உண்மையான பிறப்புக்கட்டுப்பாடு." |
| 760226 - சொற்பொழிவு SB 07.09.19 - மாயாப்பூர் |