TA/760223 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இதுவே கிருஷ்ணரின் விருப்பமாகும். அவர் நான்கு கொள்கைகளைக் கொடுக்கிறார்: 'எப்போதும் என்னைப் பற்றியே சிந்திப்பாயாக' (மன்-மனா), 'எனது பக்தனாக ஆவாயாக' (மத்-பக்த), 'என்னை வழிபடுவாயாக' (மத்-யாஜீ)... மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (ப.கீ 18.65 (1976)): 'எனக்குச் சிறிய அளவில் வணக்கங்களைச் செலுத்துவாயாக. இந்த நான்கு கொள்கைகளும் உன்னை இந்தப் பௌதிக வாழ்வின் பந்தத்திலிருந்து விடுவிக்கும்', மேலும் மாம் ஏவைஷ்யஸி அஸம்ஶய, 'எவ்வித சந்தேகமுமின்றி நீ என்னிடமே திரும்பி வருவாய்'.
மிகவும் எளிமையான விஷயம். இது கடினமானதே அல்ல. இந்தக் குழந்தையால் கூட இதைச் செய்ய முடியும். முதியவராலும் இதைச் செய்ய முடியும். படித்தவரால் எவ்வித அறிவும் இன்றியே இதைச் செய்ய முடியும். ஒரு மிருகத்தால்கூட இதைச் செய்ய முடியும். மிகவும் எளிமையானது. பக்தி யோகம் மிகவும் எளிமையானது." |
| 760223 - சொற்பொழிவு SB 07.09.16 - மாயாப்பூர் |