Jump to content

TA/760217 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் பொய்யான பெருமை கொள்ளக் கூடாது. அனைவரும்... பௌதிக உலகம் என்றால் அனைவரும் பொய்யான பெருமை கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அனைவரும், 'ஆத்யோ அஸ்மி தனவான் அஸ்மி கோ அஸ்தி மம சமஹ்' என்று நினைக்கிறார்கள். அனைவரும். இது ஒரு நோய். 'நானே மிகச் செல்வந்தன்', 'நானே சக்தி வாய்ந்தவன்', 'நானே மிக புத்திசாலி'. எல்லாமே, 'நான்'. இதற்குத்தான் அகங்காரம் என்று பெயர். அகங்கார விமூடாத்மா கர்தாஹம் இதி மன்யதே(ப.கீ 3.27 (1976)). இந்த போலி கௌரவம், ஒருவன் பொய்யான விஷயங்களில் மூழ்கியிருக்கும்போது, அவன் விமூடன் அதாவது முட்டாளாகிறான். அகங்கார விமூடாத்மா கர்தாஹம் இதி மன்யதே. இது போலி கௌரவம். நாம் இந்த போலி கௌரவத்தை கைவிட வேண்டும்."
760217 - சொற்பொழிவு SB 07.09.10 - மாயாப்பூர்