Jump to content

TA/760216 - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத்-பக்தி (இறைவனுக்கான தூய பக்தி) என்பது எந்தவொரு பௌதிக (பொருள்சார்ந்த) உடைமைகளையும் பொறுத்தது அல்ல. பௌதிக உடைமைகளைப் பற்றிய முழுமையான விளக்கம் இங்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருவன் மிகவும் செல்வந்தனாக இருந்தால், நான் இறைவனின் பக்தனாக முடியும் என்று அவன் நினைத்துவிட முடியாது. ஏனென்றால், இரணியகசிபு இந்த முழு பிரபஞ்சத்தின் செல்வங்களையும் பெற்றிருந்தான், ஆனால் அவனால் ஒரு பக்தனாக மாற முடியவில்லை.எனவே, நான் மிகவும் செல்வியாக இருக்கிறேன், நான் மிகவும் அழகாக இருக்கிறேன், நான் மிகுந்த புத்திசாலி, நான் ஒரு சிறந்த அறிஞர்", நான் மிகவும் மதிப்புமிக்க நபர் என்பது போன்ற எண்ணங்கள் அனைத்தும் தவறான புரிதல்களாகும். இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் பிரகலாத மகாராஜர் கூறுகிறார், இல்லை. இந்த தகுதிகளில் எதுவும் உங்களை பக்தியின் உன்னத நிலைக்கு உயர்த்துவதற்கு உதவ முடியாது. எதுவும் உதவாது. பக்தி மட்டுமே உதவும். கிருஷ்ணரும் பகவத் கீதையில் இதையேதான் கூறுகிறார், பக்தியா மாம் அபிஜானாதி (பக்தியின் மூலம் மட்டுமே என்னை ஒருவன் உண்மையாக அறிய முடியும்.(ப.கீ 18.55 (1976))."
760216 - சொற்பொழிவு SB 07.09.09 - மாயாப்பூர்