Jump to content

TA/760215 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

From Vanipedia
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே மனித வாழ்க்கை என்பது நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாகும். நீங்கள் நரகத்திற்குச் செல்லப் போகிறீர்களா, அல்லது சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறீர்களா, அல்லது உங்கள் நித்திய இல்லமான கடவுளின் இருப்பிடத்திற்குத் (கோலோகத்திற்குத்) திரும்பப் போகிறீர்களா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதுதான் மனிதனின் அறிவுத்திறனே தவிர, பூனை, நாய்களைப் போல உழைத்து, அவைகளைப் போலவே இறந்து போவது மனித வாழ்க்கை அல்ல.மனித வாழ்க்கை என்பது அடுத்து நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. பரிணாம வளர்ச்சிப் படிநிலை (பத்ம புராணத்தின்படி 84,400,000 உயிரினப் பிறவிகளை) கடந்து வந்துதான் நீங்கள் இப்போது இந்த மனிதப் பிறவியைப் பெற்றுள்ளீர்கள். அந்த எண்ணற்ற பிறவிகளுக்குப் பிறகு இப்போது நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்."
760215 - சொற்பொழிவு SB 07.09.08 - மாயாப்பூர்