TA/760212b - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "அது (சோம்பேறித்தனம்) அசுர குணங்களை விடவும் கீழானது. அசுர குணங்கள் கொண்டவர்களிடம் கூட ஏதேனும் ஒரு செயல்பாடு இருக்கும், ஆனால் சோம்பேறித்தனம் என்பது அறியாமை, இருள். எனவே அதிக நேரம் தூங்குவது மிக, மிக மோசமானது. அது சோம்பேறித்தனத்தின் மற்றொரு பகுதி.
நித்ராஹார-விஹாரகாதி-விஜிதௌ: ஒருவன் இந்த தூக்கத்தையும் சோம்பேறித்தனத்தையும் வெல்ல வேண்டும். உணவு (ஆஹாரம்), தூக்கம் (நித்ரா), விஹாரம் (புலனின்பம்). விஹாரம் என்றால் புலனின்பம் என்று பொருள். ஒருவன் இவற்றை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வரும் வரை குறைக்க வேண்டும். அதுவே பரிபூரண நிலை. எப்போது தூக்கம், உணவு, உடலுறவு மற்றும் பயம் ஆகியவை இல்லாமல் போகிறதோ, அதுவே ஆன்மீக வாழ்க்கையின் பரிபூரண நிலை ஆகும். அது (முழுமையாக) சாத்தியமில்லை என்றாலும், உங்களால் இயன்றவரை அதைக் குறைக்க முயல வேண்டும்." |
| 760212 - காலை உலா - மாயாப்பூர் |