TA/760205 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
Appearance
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "அங்கு என்ன அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். மருந்து கொடுக்கப்பட்டுவிட்டது. மருத்துவர், 'இத்தனை சொட்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று அறிவுரை கூறுகிறார். இப்போது நீங்கள், 'ஓ, இது நல்ல மருந்து, நான் முழுவதையும் ஒரே அடியில் சாப்பிட்டு விடுகிறேன், உடனே குணமாகிவிடுவேன்' என்று கூறுகிறீர்கள். பிறகு நீங்கள் இறந்துவிடுவீர்கள். நீங்கள் அனுபவிக்க வேண்டும்—ஆனால் அறிவுரையின்படி (விதிகளின்படி) அனுபவிக்க வேண்டும். 'நீங்கள் அனுபவிக்கவே கூடாது' என்று இறைவன் கூறவில்லை. நீங்கள், ஆனந்தமயோ ப்யாஸாத் (ānandamayo 'bhyāsāt - வேதாந்த சூத்திரம் 1.1.12) என்று அழைக்கப்படுபவர்கள். ஒரு உயிர்வாழி என்றாலே ஆனந்தமயமானது, மகிழ்ச்சியை அனுபவிப்பது. ஆனால், அந்த ஆனந்தம் எங்கே நிலையான ஆனந்தமாக இருக்கும், அந்த நிலையான ஆனந்தத்தை நாம் எப்படி அடைய வேண்டும் என்பதுதான் கற்றுத்தரப்படுகிறது. இல்லையென்றால், அறிவிலியான நீங்கள் முழு மருந்தையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டு இறந்துவிடுவீர்கள். அவ்வளவுதான்." |
| 760205 - காலை உலா - மாயாப்பூர் |